முப்பொழுதும் திருமேனி தீண்டும் உரிமைபெற்ற
சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய அவர் நண்பர் சிவனாரைச்
சிந்திப்பாம். எல்லாமும் சித்திக்குமே!
பதிகம்: [7:29]
தலம்: திருக் குருகாவூர்வெள்ளடை
பண்: நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
*1
இத்தனைஆம்ஆற்றை அறிந்திலேன்; எம்பெருமான்!
பித்தனே என்று உன்னைப் பேசுவார், பிறர்எல்லாம்
முத்தினை, மணிதன்னை, மாணிக்கம், முளைத்து எழுந்த
வித்தனே! குருகாவூர் வெள்ளடை நீ அன்றே;
*2
ஆவியைப் போகாமே தவிர்த்து, என்னை ஆட்கொண்டாய்;
வாவியில் கயல் பாய, குளத்துஇடை மடைதோறும்
காவியும் குவளையும் கமலம் செங்கழுநீரும்
மேவிய குருகாவூர் வெள்ளடை நீ அன்றே!
*3
பாடுவார் பசி தீர்ப்பாய்; பரவுவார் பிணி களைவாய்;
ஓடு நன் கலன்ஆக உண் பலிக்கு உழல்வானே!
காடு நல் இடம்ஆகக் கடுஇருள் நடம்ஆடும்
வேடனே! குருகாவூர் வெள்ளடை நீ அன்றே!
*4
வெப்பொடு பிணிஎல்லாம் தவிர்த்து எனை ஆட்கொண்டாய்;
ஒப்பு உடை ஒளி நீலம் ஓங்கிய மலர்ப்பொய்கை,
அப்படி அழகுஆய அணி நடை மடஅன்னம்
மெய்ப்படு குருகாவூர் வெள்ளடை நீ அன்றே!
*5
வரும் பழி வாராமே தவிர்த்து, எனை ஆட்கொண்டாய்;
சுரும்பு உடை மலர்க்கொன்றைச் சுண்ணவெண்நீற்றானே!
அரும்பு உடை மலர்ப் பொய்கை அல்லியும் மல்லிகையும்
விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீ அன்றே!
*6
பண்இடைத் தமிழ் ஒப்பாய்! பழத்தினில் சுவை ஒப்பாய்!
கண்இடை மணி ஒப்பாய்! கடுஇருள் சுடர் ஒப்பாய்!-
மண்இடை அடியார்கள் மனத்து இடர் வாராமே,
விண்இடைக் குருகாவூர் வெள்ளடை நீ அன்றே!
*7
போந்தனை; தரியாமே நமன்தமர் புகுந்து, என்னை
நோந்தன செய்தாலும், நுன்அலது அறியேன், நான்;
சாம்தனை வருமேலும் தவிர்த்து எனை ஆட்கொண்ட
வேந்தனே! குருகாவூர் வெள்ளடை நீ அன்றே!
*8
மலக்கு இல் நின் அடியார்கள் மனத்துஇடை மால் தீர்ப்பாய்;
சலச்சலம் மிடுக்கு உடைய தருமனார்தமர் என்னைக்
கலக்குவான் வந்தாலும், கடுந் துயர் வாராமே,
விலக்குவாய்; குருகாவூர் வெள்ளடை நீ அன்றே!
*9
படுவிப்பாய், உனக்கே ஆள் பலரையும், பணியாமே;
தொடுவிப்பாய், துகிலொடு பொன்; தோல் உடுத்து உழல்வானே!
கெடுவிப்பாய், அல்லாதார்; கேடு இலாப் பொன்அடிக்கே
விடுவிப்பாய்; குருகாவூர் வெள்ளடை நீ அன்றே!
*10
வளம் கனி பொழில் மல்கு லயல் அணிந்து அழகுஆய
விளங்கு ஒளி குருகாவூர் வெள்ளடை உறைவானை,
இளங் கிளை ஆரூரன்-வனப்பகைஅவள்அப்பன்-
உளம் குளிர் தமிழ்மாலை பத்தர்கட்கு உரை ஆமே.
திருச்சிற்றம்பலம்
நன்றி: நா.கணேசன், பிரவாகம் மடற்குழு
Thursday, February 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
வாழ்க தமிழீழம்-தமிழீழ மைந்தன்
ReplyDeleteஐயா அம்ன்ன்cஇச்சுக் கொள்ளுங்கோ. என்னால எனது வலைப்பூ முகவரியைத் திறந்து பின்னூட்டமிட முடியவில்லை. ஆற்றாமைக்கு வருந்துகிறேன். நாளை கொழும்பில் என்னை வெள்ளை வான் வந்து கடத்திட்டுப் போகலாம். அந்தப் பயம். இதை வாசிக்கும் எட்டப்பர்கள் என் பெயரை அரசுக்கு சொல்லிவிடலாம்.நாளை நான் கொழும்புக்கு போகவேண்டும். எனவே, விமான நிலையத்திலேயே கைது செய்யலாம்.மன்னிச்சுடுங்கோ
//
ReplyDeleteவாழ்க தமிழீழம்-தமிழீழ மைந்தன்
ஐயா அம்ன்ன்cஇச்சுக் கொள்ளுங்கோ. என்னால எனது வலைப்பூ முகவரியைத் திறந்து பின்னூட்டமிட முடியவில்லை. ஆற்றாமைக்கு வருந்துகிறேன். நாளை கொழும்பில் என்னை வெள்ளை வான் வந்து கடத்திட்டுப் போகலாம். அந்தப் பயம். இதை வாசிக்கும் எட்டப்பர்கள் என் பெயரை அரசுக்கு சொல்லிவிடலாம்.நாளை நான் கொழும்புக்கு போகவேண்டும். எனவே, விமான நிலையத்திலேயே கைது செய்யலாம்.மன்னிச்சுடுங்கோ
//
அட ஆண்டவா!!
இன்னலில் துடிக்கும் எம் ஊனையும் உயிர்களையும்
காப்பாற்று.
கொலைகாரச் சிங்களர் குலம் வேரோடும் வேரடி மண்ணோடும் அழியட்டும்.